college student death about truck accident to two wheeler

பூந்தமல்லி அருகே டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ஜோதிராமலிங்கம் நகரில் வசித்து வந்தவர் பரத். இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில், பொறியியல் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தினமும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவருவது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் பரத் இன்று காலை டூ வீலரில் சென்றுள்ளார். அப்போது கொடுங்கையூர் காமராஜர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சரக்கு வேன் பரத்தின் இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில் பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தப்பியோடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.