Collector turned into a car Driver

கருர் மாவட்ட ஆட்சியாளர் அன்பழகன் மக்கள் பணியில் புதுமைகளை புகுத்தி முன்மாதிரியாக் செயல்பட்டு வருபவர்.
அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இனி கட்டாயமாக திருக்குறளை படிக்க வேண்டுமென உத்திரவிட்டார். திருக்குறள் கற்பதன் மூலம் தெளிவான எண்ணங்களை மக்கள் பணி செய்பவர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே திருக்குறளை கட்டாயமாக்கினார்.

மாவட்ட ஆட்சியாளர் அன்பழகனின் ஓட்டுநர் பரமசிவத்துக்கு ஏப்ரல் 30 பணிநிறைவு பெற்றது இந்நிலையில் தன் ஓட்டுநரை கெளரவிக்கும் பொருட்டு பிரிவு உபசாரவிழா நடத்தினார்.

மேலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பணி ஓய்வு பெறும் பரமசிவத்துக்கு ஒரு நாள் ஓட்டுநராக பணியாற்றினார். இச்சம்பவம் பொதுமக்கள் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்வு உயரதிகாரிகள் தனக்கு கீழ் பணிபுரிபவர்களை நடத்த முன் மாதிரியாக உள்ளது.