காரில் லஞ்சப் பணம் சிக்கிய வழக்கில் கைதான கோவை மணடல போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி, லஞ்ச பணம் வசூலிப்பதற்கு ஒவ்வொரு வட்டார அலுவகத்திற்கு ஒரு புரோக்கர் நியமித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.  

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உமாசக்தி. இவரது காரில் கடந்த 23 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 28 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இவரையும் , இவர் உதவியாளர் முன்னாள் அரசு ஊழியர் செல்வராஜ் என்பவரை கைது செய்த போலீசார், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டல போக்குவரத்துத்துறை பொறுப்பு அதிகாரியாக உமார்சக்தி உள்ளார். இந்நிலையில் இந்த மூன்று மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலிருந்து லஞ்சப்பணத்தை சரியாக வசூல் செய்து, தனக்கு கொடுப்பதற்காக செல்வராஜ் யை உதவியாளராக நியமித்துள்ளார் உமா சக்தி. மேலும் அவர் வசூலித்து கொடுக்கும் லஞ்சப்பணத்தில், தனக்கும், தன் மேல் அதிகாரிகளுக்கும் என பிரித்து பங்கு போட்டுக்கொள்ளுவதாக விசாரணையில் கூறியுள்ளார்.

உதவியாளராக நியமித்த செல்வராஜ் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல முக்கிய தகவல்களை வாக்குமூலமாக கூறியுள்ளார். அதன் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச பணத்தை வசூலிப்பதற்கு என்று புரோக்கர்கள் நியமித்துள்ளதாகவும் அவர்கள் கொடுக்கும் மாமூல் பணத்தை தன் வீட்டில் பத்திரமாக வாங்கி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உமாசக்தி ஊருக்கும் வரும் போது என்னிடம் உள்ள லஞ்சமாக வாங்கிய பணத்தை மொத்தமாக கொடுப்பேன் என்று அவர் தெரிவித்தார். ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி அவர் பணத்தை பெற்றுக்கொள்ளுவதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளதாக அதிர்ச்சியை தகவலை தெரிவித்துள்ளார்.

தான் வசூலிக்கும் லஞ்சப்பணத்தின் கணக்கு விபரங்களை, 'வாட்ஸ் ஆப்'பில் உமாசக்திக்கு தினமும் அனுப்பிவிடுவதாகவும் கூறினார். இந்த நிலையில் தான் லஞ்ச வழக்கில் செல்வராஜுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, கோவை கோர்ட் நேற்று தீர்ப்பளித்து உள்ளது. அதன் இணை ஆணையர் உமாசக்தியிடம் ஒப்படைத்த லஞ்சப்பணத்துக்கு செல்வராஜ் எழுதி வைத்துள்ள கணக்கு விபரங்களையும் யார், யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது பட்டியலையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியுள்ளது.

அதன்படி, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோகுல், தெற்கு அலுவலகத்தில் சண்முகம், சூலுாரில் இன்னொரு சண்முகம், ஊட்டியில் சாய் மெர்சி, மேட்டுப்பாளையத்தில் ராஜன், திருப்பூர் வடக்கு, தெற்கில் சதீஷ், ராமசாமி, தாராபுரத்தில் பாபு, உடுமலையில் பாய், பொள்ளாச்சியில் ராஜேஷ், கூடலுாரில் ராஜன், அவிநாசியில் காளை சரவணன், காங்கேயத்தில் தேவா ஆகியோர் லஞ்சம் வசூலித்துக் கொடுத்துள்ளனர்.