Tamilnadu Corona : மக்களே உஷார்.. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் !
Tamilnadu Corona : தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளபோது மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 24,775 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,66,872 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்
முகக்கவசம் கட்டாயம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளது.மேலும், கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் அம்மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்