AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்
AIADMK : ஓபிஎஸ் அவர் தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து முறையிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
ஒற்றை தலைமை விவகாரம்
சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் தொடங்கிய 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இது. அத்துடன் கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோதமும் நிகழ்ந்தது.
ஓபிஎஸ் அவர் தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழுவில் நடைபெற்ற விஷயங்கள் குறித்து முறையிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க : AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?
ஜெயக்குமார் பேட்டி
அப்போது பேசிய ஜெயக்குமார், ‘அதிமுகவில் கட்சிக்காக கொடி கட்டிய தொண்டன் கூட ஒரு நாள் அதிமுக கொடியுடன் கூடிய காரில் தலைவராக வலம் வரலாம் என்றும் அதற்கு தற்போது அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களே சான்று. 1954இல் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை உருவாக்கி சாதாரணமாக ஒரு தொண்டனாக கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அண்ணா அவர்களோடு பயணித்தவர் அண்ணா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆருக்கு கட்சி துவங்கிய காலத்தில் மிகவும் பக்கபலமாக இருந்து அதிமுகவின் ஒரு தூண் ஆகவே இருந்தவர் தமிழ்மகன் உசேன்.
அதனுடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட ஜனநாயகமான கட்சி அதிமுக. அதன் பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவமரியாதை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம் அவமரியாதை செய்யப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக கண்டிக்கத்தக்க விஷயம் ஆகும். மேடையிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதை கண்டித்தார்.
மேலும் வருகிற ஜூலை 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கண்டிப்பாக முடிவு எடுக்கப்படும். அதில் கண்டிப்பாக பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி தேர்ந்த்தெடுக்கபடுவார். மேலும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு குறித்த கேள்விக்கு பாஜக ஒரு மூன்றாம் கட்சி தான், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது’ என்று பேசினார்.
இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!