கோவை சாக DIG விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர், விஜயக்குமார், 2009 ல் ஐ.பி.எஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் இவர். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்.பி யாக பணியாற்றியவர். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. அவரதும் தற்கொலைதொடர்பான தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இருந்த போதும் போலீசார் மேலும் விசாரணையை நடத்திவருகின்றனர்.

இதையும் படியுங்கள்

’இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது’ - அண்ணாமலை காட்டம்