Asianet News TamilAsianet News Tamil

தடைமீறி நடந்த சேவல் சண்டை.. கசிந்த தகவல்.. களமிறங்கிய போலீஸ்.. தலைதெறிக்க ஓடிய கூட்டம்..

கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்து உயிருடன் 3 சேவல்களும் இறந்த நிலையில் ஒரு சேவலும் மீட்கப்பட்டுள்ள நிலையில் கத்தி அல்லது விஷத்தை பயன்படுத்தி சண்டை நடைபெற்றதா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cockfighting in karur
Author
Tamilnádu, First Published Jan 15, 2022, 3:45 PM IST

கரூரில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்து உயிருடன் 3 சேவல்களும் இறந்த நிலையில் ஒரு சேவலும் மீட்கப்பட்டுள்ள நிலையில் கத்தி அல்லது விஷத்தை பயன்படுத்தி சண்டை நடைபெற்றதா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cockfighting in karur

பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை போலவே சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ள நிலையில் கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோன் அமைந்துள்ளது. அதில் காலியான இடத்தில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி வரை எந்தவிதமான சேவல் சண்டைகள் நடத்தக்கூடாது என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை ஆணை பிறப்பித்துள்ளது.

Cockfighting in karur

இந்த நிலையில் கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் விரைந்தனர். போலீசாரை கண்டு 10க்கும் மேற்பட்டோர் தலைதெறிக்க ஓடினர். இதில் பாலாஜி என்ற இளைஞர் ஒருவர் பிடிபட்ட நிலையில் சேவல் சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Cockfighting in karur

அனைவரும் தப்பியோடிய நிலையி பந்தயத்திற்கு பயன்படுத்திய உயிருடன் இருந்த மூன்று சேவல்களையும் இறந்த நிலையில் ஒரு சேவலையும் போலீசார் கைப்பற்றினர். நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டையில், சம்பவ இடம் முழுவதும் ரத்தக்காடாக காட்சி அளித்த நிலையில் சேவல் சண்டையில் கத்தி பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும், விஷம் தடவப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios