சூடானில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கு உதவ தயார்... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இந்திய குடிமக்களை அழைத்து வரும் ஆபரேஷன் காவேரி மீட்புப் பணிக்கு தமிழக அரசு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

cm stalin wrote letter to pm modi that tn govt is ready to help rescue those trapped in sudan

இந்திய குடிமக்களை அழைத்து வரும் ஆபரேஷன் காவேரி மீட்புப் பணிக்கு தமிழக அரசு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சூடானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் காவிரி என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் ஆபரேஷன் காவேரி மீட்புப் பணிக்கு தமிழக அரசு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: 4 நாள் கூட ஆகல.. இப்பவே இப்படி! ‘கோட்டை’ விட்டுடாதீங்க! திமுகவுக்கு வார்னிங் கொடுத்த வானதி சீனிவாசன்

அதில், சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இதையும் படிங்க: டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஆளுநர், எடப்பாடியும் இருக்காங்க - வெளியான பின்னணி!

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐ.என்.எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறத் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios