மாடு முட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

புதுக்கோட்டையில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

cm stalin announced 20 lakh to the family of the police who was killed by a cow in pudukottai

புதுக்கோட்டையில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் உள்ள அரிய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் கே புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த அந்த நபரை மீட்க சென்ற மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தியதில் படுகாயம் அடைந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை பற்றி புகார் கொடுங்க.! பொதுமக்களுக்கு வெகுமதி - டிஜிபியின் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0

மேலும் 63 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்த காவலர் நவநீத கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்… எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்!!

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கல்லூரில் இன்று (3-5-2023) நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த திருமயம் தாலுகா, கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரை எதிர்பாராத விதமாக மாடுமுட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தாகவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios