ஆதிபராசக்தி முதல் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி வரை -துர்கா ஸ்டாலின் கோவில் விசிட்.!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது ஆன்மிக சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார் துர்கா ஸ்டாலின். தனது கணவர் ஸ்டாலின் முதல்வர் ஆனதுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரிசையாக கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார் என்று திமுகவினர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார்.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு இதைத்தொடர்ந்து கோவில் கருவறைக்கு சென்ற துர்கா ஸ்டாலின் பயபக்தியுடன் அம்மனையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தார். பின்பு உற்சவர் அம்மனை தரிசனம் செய்த அவர் சங்கு மகாமுனிவர் தவம் செய்த இடத்தில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தார்.
அதைத் தொடர்ந்து பெரியாயி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் பகல் 12 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய கவுன்சிலர் யசோதரை சந்திரகுப்தன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்
மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரி முதல்வர் ஸ்டாலினின் குலதெய்வம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி ஆலயத்திற்கு சென்ற துர்கா ஸ்டாலின் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார். பின்னர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. சீனா விசா.. லண்டன் சாவி - சிபிஐ வலையில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்.! விரைவில் கைதா?