சீனா விசா.. லண்டன் சாவி - சிபிஐ வலையில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்.! விரைவில் கைதா?
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி
இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடைபெற்றது. அப்போது இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்
கடந்த சோதனையின் போது திறக்க முடியாத கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, நுங்கம்பாத்தின் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சாவி இல்லாததால், சிபிஐ அதிகாரிகளால் அப்போது அங்குள்ள பீரோவைத் திறக்க முடியவில்லை. தற்போது லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரத்திடம் சாவியைப் பெற்று, பீரோவைத் திறந்து சிபிஐ இன்று சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலா வழியில், பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்வார் எடப்பாடி.. கேசிபி சொன்ன அதிர்ச்சி தகவல்!