சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை சித்தறிக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் இன்று நேரில் பார்வையிட்டனர்.

மூதறிஞர் ராஜாஜியின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 24ம் தேதி தொடங்கி ஜனவரி 2ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புகைப்பட கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்டோரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.