திருநெல்வேலியில், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட துணிப்பைகள் ஆட்சியரகத்தில் விற்கப்பட்டன. அங்கு மக்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு தனது சொந்த செலவில் துணிப்பைகளை வாங்கிக் கொடுத்தார் ஆட்சியர் ஷில்பா.

ban plastic க்கான பட முடிவு

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. அதற்கான முதற்கட்ட முயற்சியாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து அதற்கு தடைப்போட்டு வருகின்றனர். பிளாஸ்டிக்கு மாற்றாக துணிப்பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய அடர்த்தி மிக்க பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

tirunelveli collector க்கான பட முடிவு

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில், "பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்" என்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்ட மகளிர் திட்டத்தில் இருக்கும் 6826 சுய உதவிக் குழுக்கள் மூலம் துணிப்பை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவர்கள்மூலம் ரூ.5 முதல் ரூ.40 வரையுள்ள துணிப்பைகள் விற்பனைச் செய்யப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 19 பஞ்சாயத்து ஒன்றியகளில், ஒன்றியத்திற்கு ஒன்று என்ற கணக்கில் இடம் தேர்வு செய்யப்பட்டு துணிப்பைகள் விற்கப்படுகின்றன.

அதன்படி, நேற்று திருநெல்வேலி ஆட்சியரகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த விற்பனையை ஆட்சிய ஷில்பா தொடங்கி வைத்தார். நேற்று திங்கள்கிழமை என்பதால் "மக்கள் குறைதீர் கூட்டம்" நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் இருந்த பிளாஸ்டிக் பையை வாங்கிக் கொண்டு தனது சொந்த செலவில் அவர்களுக்கு துணிப்பைகளை வாங்கிக் கொடுத்தார் ஆட்சியர் ஷில்பா.

இதனைப் பார்த்த குறைதீர் கூட்டத்திற்கு ஏராளமான பெண்கள் மற்றும் ஆணிகள் துணிப்பைகளை வாங்கிக் கொண்டுச் சென்றனர். அவர்களிடம் ஆட்சியர் ஷில்பா, "பிளாஸ்டிக் பயண்டுத்த வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் மக்கள் குறைதீர் கூட்டம் தொடங்கியது.