கோவை மாவட்டம் தொண்டாமூத்தூர் பகுதியில் வழி தவறி விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளுடன் இருந்த குட்டி யானை ஒன்று, தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலி தாண்டி செல்ல முடியாமல் கஷ்டப்பட்டதூம், மின்சாரத்தை நிறுத்திவிட்டு, கம்பியை அமுத்தி விட்டு போ சாமி என்று தோட்டுக்கார பெண்மணி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.   

கோவை மாவட்டம் தொண்டாமூத்தூர் பகுதியில் வழி தவறி விவசாய நிலத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளுடன் இருந்த குட்டி யானை ஒன்று, தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலி தாண்டி செல்ல முடியாமல் கஷ்டப்பட்டதூம், மின்சாரத்தை நிறுத்திவிட்டு, கம்பியை அமுத்தி விட்டு போ சாமி என்று தோட்டுக்கார பெண்மணி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பே பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் குட்டி யானையுடன் 5 காட்டு யானைகள் நுழைந்தது. பின்னர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்த வந்த வனத்துறையினர் விவசாய நிலத்திற்குள் இருந்த யானை கூட்டத்தை விரட்டினர்.

இதனால் வேகமாக ஓடிய யானைக்கூட்டம், பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள ஆனந்தன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்தது. ஆனால் அந்த தோட்டத்தை காட்டு பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற மின் வேலி அமைந்திருந்தார். இந்நிலையில் அங்கிருந்த கடந்த செல்ல முயன்ற யானைக்கூட்டம், மின்வேலியில் சிக்கி விட கூடாது என்பதற்கா உடனே அதன் மின்சாரத்தை நிறுத்தினார். மேலும் அந்த யானைகளிடம் மின்சார கம்பியை அமுத்தி விட்டு செல்லுங்க என்று அந்த தோட்டத்துகாரர் குடும்பம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

காட்டு யானைகளுடன் வந்திருந்த குட்டியானை, போடப்பட்டிருந்த மின் கம்பியை மிதித்து செல்ல இயலாமல் ரொம்ப சிரமபட்டது. அதனை கண்ட தோட்டத்துக்கார பெண், பச்சை பிள்ளை, அய்யோ சாமி வலிக்க போகுது, கம்பியை அமுத்திவிட்டுப்போ என்று பாசத்துடன் கூறும் வார்த்தை மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.அதில் குட்டியானை தாண்டி செல்ல முடியாமல், மின் வேலியில் இடித்து பின்னே வந்தது. அப்போது நம்முடைய குழந்தைகளிடம் கூறுவது போல், சாமி பார்த்து போங்க, கம்பியை அமுத்திட்டு போங்க என்று பத்திரமாக யானைக்கூட்டம் செல்ல வேண்டும் என்று பரிதவிப்புடன் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கோவைகாரங்க பாசக்காரங்க எனும் வாசகங்களுடன் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது யானைகள் மீது நிகழ்ந்தேறும் வன்முறைகள் குறித்து நிறைய செய்திகள் பார்த்துள்ளோம். மனிதன் உருவாக்கிய எண்ணற்ற காரணிகளால் யானைகள் சந்திக்கும் இடர்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. யானைகள் செழிப்புடன் வளமாக இருந்தால் மட்டுமே மனித இனம் உயிர் வாழ முடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆனால் வலசை பாதைகளை ஆக்கிரமித்து ரிசார்டுகள், கட்டிடங்கள், சாலைகள் , இரயில் தண்டவாளங்கள் என்று பலவற்றை நாம் எழுப்பிவிட்டோம். அதனாலும் உணவு பற்றாக்குறையாலும் ஊருக்குள் புகும் யானை கூட்டங்கள் கொடூரமாக தூரத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பேசும் பெண்ணின் அன்பு, இன்னும் மனிதம் வாழ்கிறது என்பதை பறைசாற்றியுள்ளது.

Scroll to load tweet…