அரசு தொடக்க பள்ளி வகுப்பறையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக சுதாகர் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்ற போதிலும் தலைமை ஆசிரியர் சுதாகர் பள்ளிக்கு காலையில் வந்தார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பரும் மற்றொரு பள்ளியின் ஆசிரியருமான சுப்பையா என்பவரும் அங்கு வந்தார். 

ஆனால் அவருடன் இளம்பெண் ஒருவர் தனது மகனுடன் வந்திருந்தார். பிறகு அந்த இளம்பெண் பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றதும் கதவை சுதாகர் அடைத்தார். நீண்ட நேரமாக இருவரும் உள்ளே இருந்தனர். ஆனால் தாயை அறைக்குள் விட்டு வெளியே கதவை பூட்டியதை கண்ட சிறுவன் அழத்தொடங்கினான். 

இதனையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு தின்பண்டம் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினார், ஆனாலும் சிறுவன் அழுகையை நிறுத்தவில்லை. மேலும் சிறுவனோ அம்மாவை அறைக்குள் அடைத்து பூட்டிவிட்டார்கள் என்று கத்தினார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர் குழந்தை சொல்கிறது என்று கேட்டனர். உடனே  என்ன நடந்தது என்று விசாரிக்க தொடங்கினர்.

அப்போது எனது அம்மாவை அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படும் அந்த இடத்தை காண்பித்தான். இதனையடுத்து அந்த பகுதியினர் பள்ளிக்கு விரைந்து சென்று பூட்டிய அறையை திறக்க முயன்றனர். அப்போது அந்த அறையில் இளம்பெண்ணுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. மக்கள் திரண்டதை கண்ட இளம்பெண் பின்னர் பீரோ அருகே ஒளிந்து நின்று கொண்டார்.

இதுதொடர்பான தகவல் உடனடியாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த போது சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறுவதாக கூறி, பள்ளி ஆசிரியர்களிடமும், மதிய உணவு வழங்கும் பள்ளி சத்துணவு அமைப்பாளரிடமும் பதிவேடுகளில் முதல் நாளே கையெழுத்துகளை சுதாகர் பெற்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் சுதாகரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். அவரது நண்பரான ஆசிரியர் சுப்பையா ஏற்கனவே தோவாளை தாலுகாவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.