விருதுநகர்

வாகனம் ஓட்டுவோர் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக உத்தரவிட்டிருப்பதைக் கண்டித்து விருதுநகரில் சிஐடியூ-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகனம் ஓட்டுவோர் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மாநில அரசைக் கண்டித்தும், சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைப்பெற்றது.

திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாவட்டத் தலைவர் வீரசதானந்தன் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தைத் தொடங்கி வைத்து சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தேவா பேசினார்.ஆர்ப்பாட்டத்தில்

மாவட்டத் துணைச் செயலாளர்கள் சசிக்குமார், பிச்சைக்கனி, மார்க்சிஸ்டு ஒன்றியச் செயலாளர் இசக்கி, கட்டுமானத் தொழிலாளர் ஒன்றியச் செயலாளர் சந்தானம் உள்பட ஏராளமான ஓட்டுநர்கள் இதில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இறுதியில் போராட்டத்தை முடித்து வைத்து சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன் பேசினார்