அரியலூர் 

ஏலாக்குறிச்சியில் நடைபெறும் அடைக்கல அன்னை திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை கேட்டு ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம், கிறிஸ்துவ நல்லண்ணெ இயக்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். 

அரியலூர் மாவட்டம் , ஏலாக்குறிச்சியை சேர்ந்த கிறிஸ்துவ நல்லண்ணெ இயக்கத்தினர் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "வீரமா முனிவரால் பாடப்பெற்றது ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலம். அரியலூர் மன்னர் மழவராயரால் 175 ஏக்கர் இடம் கிடைக்கப் பெற்ற இந்த தேவலாயத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாத இறுதியில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.  

இந்த பெருவிழாவுக்கு தமிழக அரசு சுற்றுலா தலத்துக்கான அங்கீகாரத்தை அறிவித்துள்ளது. எனவே, ஆட்சியர் அவர்கள், ஆண்டுதோறும் திருவிழாவுக்கு ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.