மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை..! ஆளுநர் புகாரால் தலைமைச் செயலாளருக்கு திடீர் நோட்டீஸ்

சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆளுநர் ரவி புகார் அளித்திருந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Children Commission notice to chief secretary after governor complaint that virginity test was conducted on girl students

மாணவிகளுக்கு கன்னி தன்மை சோதனை

தில்லை நடராஜர் கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அறநிலையத்துறையின் கீழ் இல்லாத தில்லை நடராஜர் கோயிலில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு போடப்பட்டது. இதில்  குழந்தை திருமணங்கள் தொடர்பாக சிறுமியர்களை அழைத்துச் சென்று  6,7-ம் வகுப்பு மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும்

Children Commission notice to chief secretary after governor complaint that virginity test was conducted on girl students

தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்

இது குறித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறியிருந்தார். நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்தசம்பவம் பரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் புகாரையடுத்து தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதில், ஆளுநரின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 7 நாட்களுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இப்படியே போச்சுனா அதிமுக அவ்வளவு தான்.. ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு அறிவுரை சொல்லும் ஜெயலலிதா உதவியாளர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios