மதமாற்ற குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பள்ளி... ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!!
சென்னையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றின் மீது மதமாற்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுத்தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆளுநரிடம் 85 பக்கம் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றின் மீது மதமாற்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுத்தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆளுநரிடம் 85 பக்கம் கொண்ட அறிக்கையினை சமர்ப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளியில் மதமாற்றம் நடைபெறுவதாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் தலைமைச் செயலாளருக்கும், தமிழக டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதி இருந்தது. இதுதொடர்பாகத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளியில் கடந்த 6 ஆம் தேதி சிறப்புக் குழு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டது.
இதையும் படிங்க: KFCயில் வாங்கிய பர்கரில் கிடந்த கையுறை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம் !
அந்த ஆய்வில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை விடுதிக்கு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது என்றும், அந்தப் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிறுமிகளுக்கு விடுதி வார்டனால் தொல்லை அளிக்கப்பட்டு வருகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால், அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை... ரூ.18.37 லட்சம் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!!
இதனிடையே சம்மந்தப்பட்ட ராயப்பேட்டை CSI மோனஹன் பள்ளியில் மதமாற்ற முயற்சி ஏதும் கண்டறியப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் ஆகிய இருவரும் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத இல்லம் சம்பந்தப்பட்ட 85 பக்கம் கொண்ட அறிக்கையினை நேரில் சமர்பித்தனர். ஆளுநருக்கும், அரசுக்கும் இடையில் கருத்து மோதல் நிலவும் சூழலில், மாநில அரசின் கருத்துக்கு எதிராக, ஆளுநரிடமே குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.