Asianet News TamilAsianet News Tamil

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க வேண்டும்.. அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்..

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
 

Chief Secretary's letter to all Department Officers and District Collectors
Author
Tamilnádu, First Published Jul 7, 2022, 3:24 PM IST

அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:நிலத்தடி நீர் எடுக்க ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு

சமீபத்தில் தலைமை நீதிபதி அமர்வு வழக்கு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் ,அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட அட்சியர்களுக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.

மேலும் படிக்க:தமிழகத்தில் கடும் குளிர் வாட்டி வதைக்கும்.. தீயாக பரவும் செய்தி.. வானிலை மையம் பரபரப்பு விளக்கம்..

மேலும், அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios