2 ஆண்டு ஆட்சியைப் பூர்த்தி செய்த திமுக அரசு கடந்த சில நாட்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துவருகிறது. இன்று 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் தமிழக அரசில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். பல துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். மே 16ஆம் தேதி ஒரே நாளில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள். அதில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், மே ஆம் தேதி 39 காவல்துறை அதிகாரிகள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பரேஷன் மேலாண் இயக்குநர் கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரை செங்கல்பட்டு ஆட்சியராக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சரத்பாபு மறைவுக்குப் பின் இந்த நிலைமையா? சொத்துகளைப் பிரிப்பதில் சொந்தங்களுக்குள் சண்டை?

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநர் சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரா ராகுல் நாத் தொடருவார். அவரை தூத்துக்குடி கலெட்ராக நியமனம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
தூத்துக்குடி கலெக்டராக செந்தில்ராஜ் தொடந்து செயல்படுவார். அவரை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமித்த உத்தரவு ரத்தாகிவிட்டது. திருப்பூர் கலெக்டர் வினீத், ஆவின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநராக நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனுக்கு தொல்லியல்துறை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை முதன்மைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திடீரென 1 கி.மீ. தூரம் ரிவர்சில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்!
