சேலம் விமான நிலையம் இதோடு அல்லாமல் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் விரிவாக்கம் செய்யப்பட்டப்பின் பெரிய ரக விமானங்கள் இயக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

சேலம் சென்னை இடையேயான விமான சேவை போக்குவரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். 

இந்த விமானத்தில் 72 பயணிகள் பயணிக்கம் முடியும் வகையில் சிறிய ரக விமானமாக  உள்ளது. 

பின்னர், விழாவில் பேசிய அவர், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் பல்வேறு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படுகின்றன எனவும் மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

வேலூர் தஞ்சையில் இருந்து விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுவது எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

விமான சேவை ஏழை எளிய மக்களுக்கு எட்டாத கனியாக இருந்தது எனவும் ஆனால் இந்த விமான சேவை மூலம் அனைத்து வகையான மக்களும் பயன்பெறுவர் எனவும் குறிப்பிட்டார். 

7 ஆண்டுகளுக்கு பின் சேலம் சென்னை இடையேயான விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.