MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இது சரிப்படாதுங்க... ராமதாஸ் அணியை விரட்டிய எடப்பாடி..? இப்படியொரு சிக்கலா..?

இது சரிப்படாதுங்க... ராமதாஸ் அணியை விரட்டிய எடப்பாடி..? இப்படியொரு சிக்கலா..?

ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும்.

1 Min read
Author : Thiraviya raj
Published : Feb 18 2026, 05:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அல்லாடும் ராமதாஸ் அணி
Image Credit : Asianet News

அல்லாடும் ராமதாஸ் அணி

தமிழக அரசியலில் பாமக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பிரிவு ஜனவரியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. ஆனால் டாக்டர் ராமதாஸ் தரப்பு தனி அணியாக உள்ளது. அவர் தனது மகன் அன்புமணியுடனான மோதல் காரணமாக 'அய்யா பாமக' பெயரில் கட்சி தொடங்க தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரது தரப்பு அதிமுக கூட்டணியை நிராகரித்து வந்தது.

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார். சமீபத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அவர் கூறி இருந்தார். தேர்தல் நெருங்கும் நிலையில் இதில் மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்பட்டது.

23
இபிஎஸ் -அருள் சந்திப்பு
Image Credit : Asianet News

இபிஎஸ் -அருள் சந்திப்பு

இந்நிலையில், ராமதாஸ் தரப்பு பாமகவும், அதிமுக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.வான அருள், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் விரைவில் டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்ட மேடையில் அய்யா டாக்டர் ராமதாஸ் இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

Related Articles

Related image1
இந்தியாவில் நேருக்கு நேர் சந்திக்கும் உலகின் பரம எதிரிகள்..! ரத்தக் கொதிப்பில் பாகிஸ்தான்- சீனா..!
33
ராமதாஸ் தரப்பை ஏற்க இபிஎஸ் மறுப்பு?
Image Credit : Google

ராமதாஸ் தரப்பை ஏற்க இபிஎஸ் மறுப்பு?

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் ராமதாஸ் பாமக தரப்பை ஏற்க இபிஎஸ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., அருள் தன்னை சந்தித்த போதும் கூட்டணி குறித்து பேச இபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அன்புமணி தரப்பு ஏற்கனவே கூட்டணியில் இணைந்து விட்டதால் இபிஎஸ் தரப்பு மறுப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைத்தால் அன்புமணி தரப்பை சமாதானப்படுத்த வேண்டிய நிலை வரும். அன்புமணி தரப்பு ஒருவேளை சமாதானம் அடைந்தாலும், தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படும்’’ எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
இராமதாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிப்ரவரி 23 முதல் மார்ச் 8 வரை.. தரமான சம்பவத்துக்கு நாள் குறித்த முதல்வர் ஸ்டாலின்!
Recommended image2
சென்னை டூ தூத்துக்குடி இனி 8 மணி நேரம் தான்.! வந்தே பாரத் ரயில் ரெடி! பயணிகள் ஹேப்பி!
Recommended image3
ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி... ஸ்டாலின் பிரித்த ஏ-பி-சி கேட்டகிரி... அலறி ஓடும் அமைச்சர்கள்..!
Related Stories
Recommended image1
இந்தியாவில் நேருக்கு நேர் சந்திக்கும் உலகின் பரம எதிரிகள்..! ரத்தக் கொதிப்பில் பாகிஸ்தான்- சீனா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved