ஆகஸ்ட் 27ல் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் முனைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 10 நாள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றிருந்த நிலையில், இந்த முறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.\
நீர்நிலை பாதுகாப்பில் தனித்துவம்; விஎம் சத்திரம் அமைப்பை கௌரவித்த நெல்லை ஆட்சியர்
இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணம் எத்தனை நாட்களுக்கு இருக்கும் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
10 லட்சம் மக்களை கொன்று இந்தியா - பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது? சத்குருவின் கேள்வியும், பதிலும்
இந்த பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் பயணம் தொடர்பான முழு விவரம் விரைவில் முதல்வரின் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.