பல உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளீர்கள்.! தமிழகத்தை சேர்ந்த என்டிஆர்எப் வீரருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

ரயில் விபத்து ஏற்பட்டவுடன்  உரிய நேரத்தில் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 
 

Chief Minister Stalin praises NDRF personnel for helping rescue train accident victims

ஒடிசா ரயில் விபத்து

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் ஒரே இடத்தில்  மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரமண்டல் ரயிலில் பயணித்த 787 பயணிகளில் 127 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது வரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் இந்த ரயிலில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் பயணம் செய்துள்ளார்.  இவர் ஏசி பெட்டியில் பயணம் செய்த நிலையில், காயம் இன்றி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக அவர் கூறுகையில்,

Chief Minister Stalin praises NDRF personnel for helping rescue train accident victims

மீட்பு பணிக்கு உதவிய தமிழக வீரர்

விபத்து நடைபெற்ற போது நான் பயணித்த ஏசி பெட்டியில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. அப்போது பயணிகள் கீழே விழுந்து அலறினர். சிறிது நேரத்தில் வண்டி நின்ற நிலையில், கீழே இறங்கி பார்த்த போது கோரமான விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். அவர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதுவரை என்னால் முடிந்த உதவிகளை செய்ததாக தெரிவித்து இருந்தார். இவரது  பேட்டி சமூக வலைதளத்தில் பரவி பலரது பாராட்டையும் பெற்றது.

 

பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்

இதனையடுத்து இது  தொர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சிக்னலில் வேண்டுமென்றே நிகழ்ந்த தலையீட்டால் ரயில் விபத்து நடந்துள்ளது: ரயில்வே அதிகாரிகள் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios