திமுக மூத்த நிர்வாகியான குளித்தலை சிவராமன், கருணாநிதியின் முதல் வெற்றிக்கு உதவியவர், சமீபத்தில் காலமானார். அவரது இல்லத்திற்குச் நேரில் சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
Kulithalai Sivaraman death : குளித்தலை சிவராமன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தவர். குளித்தலை தொகுதி திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும், ஏனெனில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி 1957 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் முதன்முதலாகப் போட்டியிட்டு வென்றார். எனவே இந்த தேர்தலில் கருணாநிதியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் குளித்தலை சிவராமன், 1957 தேர்தல் பிரசாரத்தில் அவர் உள்ளூர் ஆதரவாளர்களை ஈர்த்து, கருணாநிதியின் பிரச்சாரத்தை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாகவே கருணாநிதி திமுகவின் 15 எம்எல்ஏக்களில் ஒருவராக அவர் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது
எனவே திமுகவிற்காக உழைத்த குளித்தலை சிவராமனை கவுரவிக்கும் வகையில் திமுக முப்பெரும் விழாவில் 'பாவேந்தர்' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 2025 ஆகஸ்ட் 28 அன்று உடல்நலக் குறைவால் குளித்தலை சிவராமன் காலமானார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுக்கு திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நேற்று திமுகவின் முப்பெரும் விழா கரூரில் நடைபெற்றது. இந்த விழாவில்
குளித்தலை சிவராமன் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின்
அவரது மறைவுக்கு துயரம் தெரிவித்து, சிவராமனின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, பாவேந்தர் விருதை அவரது நினைவாக வழங்கினார். இந்த நிலையில் இன்று காலை குளித்தலை சிவராமன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரின் உறவினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
