Asianet News TamilAsianet News Tamil

யார் இந்த சபாநாயகம்..! காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டது ஏன்.?

இராஜாஜி, காமராஜர், கருணாநிதி என பல முதலமைச்சர்களுடன் பணியாற்றிய முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகத்திற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Chief Minister Stalin condoles the demise of Tamil Nadu former Chief Secretary Sabanayagam
Author
First Published Jun 23, 2023, 11:48 AM IST

முன்னாள் சபாநாயகர் மறைவு

தமிழக அரசு பணிகளிலையே முதன்மையான பணி தலைமைச்செயலாளர் பணி, சுமார் 33 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்த மறைந்தவர் முன்னாள் சபாநாயகர் சபாநாயகம்,  1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிறந்த அவர்,  1943 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய போது  இந்திய குடிமைப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1945-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தனது பணியை சபாநாயகம் தொடங்கினார். கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் துணை ஆட்சியராகவும்,  பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் மத்திய அரசு பணி என பல முக்கிய அரசுப் பணிகளில் பொறுப்பு வகித்துள்ளார்.  1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1976ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அப்பதவியில் தொடர்ந்தார்.  

Chief Minister Stalin condoles the demise of Tamil Nadu former Chief Secretary Sabanayagam

பல முதல்வர்களோடு பணியாற்றி சபாநாயகம்

இராஜாஜி, காமராஜர், கருணாநிதி என பல முதலமைச்சர்களோடும் சபாநாயகம் பணியாள்ளியுள்ளார். 1980 ஆம் ஆண்டு டெல்லியில் மத்திய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். இந்தநிலையில் நேற்று வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101 அவருக்கு அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய நூற்றாண்டு நாயகர் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு சபாநாயகம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

Chief Minister Stalin condoles the demise of Tamil Nadu former Chief Secretary Sabanayagam

காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி

இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, 70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆட்சிப் பணி வரலாற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர். ஆட்சிப் பணிக்கு வருவதற்கு முன்பாக இராணுவத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நேர்மையும் துணிச்சலும் தலைமைப் பண்பும். செயல்திறனும் ஒருங்கே அமையப்பெற்ற திரு சபாநாயகம் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

நூற்றாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் தலைமைச் செயலாளர் திரு சபாநாயகம் அவர்களை கௌரவிக்கும் விதமாக அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதே போல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஜூன் 23ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மறக்க முடியாத நாள்? என்ன காரணம் தெரியுமா? பிளாஸ்பேக்

Follow Us:
Download App:
  • android
  • ios