அவரது புன்னகையை எண்ணைக்கும் மறக்க முடியாது.. வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த வேலம்மாள் பாட்டி புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார் என முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

யார் இந்த வேலம்மாள் பாட்டி
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் கோரோனா நிவாரண தொகை மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது நாகர்கோவிலில் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்ற வேலம்மாள் பாட்டி மலர்ந்த முகத்துடன் போஸ் கொடுத்த புகைப்படம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பரவி தங்களது வாட்ஸ் அப் முகப்பு பக்கமாகவே வேலம்மாள் பாட்டி இடம்பெற்றிருந்தார்.
வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கீடு
இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் இடம்பெற செய்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு என பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில் வேலம்மாள் பாட்டியின் படம் விளம்பரப்படமாக இடம்மெற்றிருந்தது. கன்னியாகுமரி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை வேலம்மாள் பாட்டி சந்தத்தார். அப்போது தனக்கு வீடு வேண்டும் என கோரிக்கவை வைத்தவருக்கு உடனடியாக தமிழக அரசு சார்பாக வீடும் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில் நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வசித்துவந்த வேலம்மாள் பாட்டி, கடந்த சிலதினங்களாகவே வயதுக்கு ஏற்ற உடல்நலக் குறைவால் தவித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு வயது முதிர்வால் உயிர் இழந்தார்.
புன்னகை வழியாக நிலைத்திருப்பார்
இதனையடுத்து வேலம்மாள் பாட்டி மறைவு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
வேலம்மாள் பாட்டி முதல்வரிடம் சொன்ன ஒற்றை வார்த்தை...! கன்னியாகுமரியில் நெகிழ்ச்சி...!