கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழா தேதி அறிவிப்பு.! எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வருகிற 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Chief Minister Stalin announcement that the Karunanidhi Memorial will be inaugurated on February 26 KAK

கலைஞர் கருணாநிதி நினைவிடம்

நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று காலை  கேள்வி நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது.  

Chief Minister Stalin announcement that the Karunanidhi Memorial will be inaugurated on February 26 KAK
  
பிப்ரவரி 26ஆம் தேதி திறப்பு விழா

தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும், தலைவர் கலைஞர் அவர்களுடைய புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி  மாலை 7-00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

Chief Minister Stalin announcement that the Karunanidhi Memorial will be inaugurated on February 26 KAK

எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை.  அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்.  முடிவெடுத்திருக்கிறோம்.  ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.  தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

காத்திருந்தது எல்லாம் வீண்... இனி அதிமுகவுடன் கூட்டணி இல்லை.? முடிவுக்கு வந்தது பாஜகவின் ரகசிய பேச்சுவார்த்தை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios