ஒரு கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கூறினார்.  

மகளிர் உரிமை தொகை

மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி நாடெங்கும் ஏன் உலகெங்கும் இருக்கக்கூடிய பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் அது ஈர்த்திருக்கிறது. இந்த மாபெரும் திட்டத்தினை செயல்படுத்து விதம் குறித்தும் அதில் பயன் பெற போகக்கூடிய குடும்ப தலைவிகளின் தேர்வு குறித்தும் மாமன்ற உறுப்பினர்கள் சில தெரிவித்த கருத்துக்களை ஒட்டியும் அவருக்கு தேவையான விளக்கத்தை இந்த அவைகளை பதிவு செய்வது என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். சமூகம் அரசியல் பொருளாதாரம் மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீன மையம் என்கிற திராவிட மாநகராட்சிய நாம் நடத்தி வருகிறோம். ஆட்சி பொறுப்பேற்ற முதல் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வகையில் அதை மட்டுமல்லாமல் அறிவிக்காத திட்டங்களையும் பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த பேரவையும் இந்த நாட்டு மக்களும் நன்கு உணர்வார்கள்.

மத்திய அமைச்சரை அன்புமணி சந்திக்காதது ஏன்.? தேல்தலுக்காக பீதியை கிளப்புறாங்க..? பாமகவை விளாசும் திமுக அமைச்சர்

தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சி ஆட்சி தொடங்கி கடந்த ஒரு நூற்றாண்டு காலம் திராவிட இயக்கம் அயராத பணியாற்றியதினுடைய விளைவு இன்று பள்ளி கல்லூரி படிப்புகளில் மாணவிகள் அதிகம் நுழைந்துள்ளார்கள். அது மட்டுமல்ல அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது அரசு பணியாளர்கள் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ் சமூகத்தினுடைய முதிர்ச்சியை காட்டுகிறது. இந்த அளவு ஏழை மக்களின் குடும்பங்களிலும் கிராம பொருளாதாரத்தை சுமக்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மகளிர் உரிமைத் தொகை என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது. 

ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை

இந்த திட்டத்தின் மூலம் வறுமை பாதியாக குறைந்திட வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவது உண்டு உண்மையில் ஒவ்வொரு நாளும் தன் திறனைக்கேற்ற பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலும் தன் தாய், சகோதரி மனைவி என வீட்டு பெண்ணுடைய பல மணிநேரம் உழைப்பு மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பெண்களுடைய உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் மகளிர் உரிமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எவ்வளவு பேர் பயன்படுவார்கள் என்று பலர் மனக்கணக்கு போட்டு வருகிறார். என்பதை நாம் பார்த்து வருகிறோம். இது குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்ததற்கு முன்னால் ஒன்றை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஓபிஎஸ்க்கு சட்டசபையில் பேச வாய்ப்பு..! எதிர்த்த இபிஎஸ்.! வேட்டியை மடித்து கொண்டு ஆவேசமடைந்த மனோஜ் பாண்டியன்

ஊடகம் ஒன்றில் இந்த திட்டத்தின் உதவியை பெறுபவர்கள் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு என அரசு அனைவருக்கும் கொடுக்கலாமா என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இல்லாத ஏழை மக்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று ஒரு பெண்மணி பதில் சொல்லுகிறார். இந்த திட்டம் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது. அனைவருக்கும் வீடு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால் வீடு இல்லாதவர்களுக்கு ஒரு கனவு இல்லம் அமைத்து தருவது என்று தான் பொருள்.

அனைவருக்கும் நிலம் என்ற ஒரு திட்டம் என்றால் நிலம் அற்ற தொழிலாளர்களுக்கு தான் அடிப்படை நோக்கம் முதியோர் ஓய்வூதியம் என்றால் ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முடையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால் வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள் அந்த வகையில் இந்த மகளிர் உரிமைத்துறை திட்டம் இரண்டு நோக்கங்களை உள்ளது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்க அங்கீகாரம் முதன்மையானது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால் வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள் அந்த வகையில் இந்த மகளிர் உரிமைத்துறை திட்டம் இரண்டு நோக்கங்களை உள்ளது. 

கட்டுமான பெண் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சிறு வியாபாரிகள் என பல்வேறு வகைகளில் தன் உழைப்பை பல்வேறு வகைகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றை விளங்க இந்த மகத்தான மகளிர் உரிமை வழங்கக்கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிய வகையில் அமைந்துவிடும் என்பதை இந்த மாமன்றத்தில் மிகுந்த பெருமிதத்தோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைவருக்கும் வங்கி கணக்கில் செலுத்துப்படும்

மாதம் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என்று நம்பும் எந்த குடும்பத் தலைவியும் மனிதனை அடிப்படை பெண்ணுரிமைக்காக கூடிய எனது தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு கைவிட்டு விடாதே என்ற உறுதியை இந்த மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன். பெண்களை சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆயிரம் ரூபாய் திட்டம் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என முதலமைச்சல் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.