மத்திய அமைச்சரை அன்புமணி சந்திக்காதது ஏன்.? தேர்தலுக்காக பீதியை கிளப்புறாங்க..? பாமகவை விளாசும் திமுக அமைச்சர்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லையென வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசு,?
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பூங்காவை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக நீங்கள் செயல்படுவதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு இடைத்தரகராக நான் செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்..
சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். காய்க்கிற மரத்தில் தான் கல்லடி படும். அரசியலுக்காக சொல்வார்கள். என்.எல்.சி. சுரங்க விரிவாக்கம் தொடர்பாக எம்.பி.யாக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் , மத்திய நிலக்கரி துறை அமைச்சரை சந்திக்கலாம். நாடாளுமன்ற கூட்டத்தில் கூட கேள்வி கேட்கலாம். அங்கே கூட அவர் போராட்டம் நடத்தலாம். ஆனால் ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது! போற போக்கில் ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக தாக்கிய இபிஎஸ்..!
மக்களிடம் பீதியை கிளப்புறாங்க
மத்திய அரசிடம் தான் இது போன்ற சுரங்கங்கள் இருக்கிறது. சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி எதுவும் வழங்கவில்லை. காவிரி டெல்டா பகுதியாக , பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருப்பதால், இது போன்ற புதிய சுரங்கங்கள் அமைக்க அனுமதி கிடைக்காது. வேளாண்மையை பாதிக்கிறது எதுவும் அங்கு வராது என்பது தான் சட்டம். பாமகவினர் பீதியை கிளப்புகிறார்கள். கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, அந்த சட்டம் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. திடீரென மாசு ஏற்படும் என்று பீதியை கிளப்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ளது. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் புதிதாக பீதியை உண்டாக்குகிறார்கள். அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சர்கள் இருந்தனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறார். அங்கு அவர்இது பற்றி பேசட்டும் என கூறினார்.
என்எல்சி-வதந்தி பரப்புறாங்க
2017-ம் ஆண்டு மத்திய அரசிடம் அனுமதி பெற்று என்.ஓ.சி.எல். நிறுவனம் இந்த பகுதி நிலத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய அனுமதி பெற்று இருக்கிறார்கள். இது நமது கவனத்திற்கு வந்தவுடன், அது தடை செய்யப்பட்டு உள்ளது. இப்போது ஆய்வு செய்யவில்லை. உடனே சுரங்கம் தொடங்க போகிறார்கள் என்று வசந்தியை பரப்புகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தான் 1700 பேருக்கு நிரந்தர பணியாளர் வேலை வாங்கி கொடுத்தோம். தற்போதும் பேச்சுவார்த்தை நடத்தி 1700 பேருக்கு நிரந்தர வேலை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். 1000 பேருக்கு ஓய்வு பெறும் வரை வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்களை குழப்ப நினைத்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவலை பரப்புகிறார்கள். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்கள் பீதி அடைய வேண்டாம் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்..? அதுதான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தல் - கி.வீரமணி எச்சரிக்கை