இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள  திரௌபதி முர்முவுக்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

இந்திய குடியரசுதலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். முதல் பழங்குடி பெண் குடியரசு தலைவராக பதவியேற்று அந்த இடத்தை அலங்கரித்துள்ளார். இதனையடுத்து அவரது சொந்த மாநிலத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியக் குடியரசுத் தலைவராகத் பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தியக் குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என அந்த வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல்...! திமுகவை அலறவிடும் அதிமுக மாஜி அமைச்சர்

பொதுச்செயலாளராக முதல் போராட்டத்தில் இபிஎஸ்...! ஓபிஎஸ் தொகுதியில் ஆர்ப்பாட்டத்தை திடீரென ஒத்திவைத்த அதிமுக

அதே போல முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்திற்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில், 
அன்பார்ந்த திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களே, இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன். நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடித்தில் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் பெயரில் அறிக்கை வெளியிட்ட குடும்பத்தினரே.. பேனா நினைவு சின்னம் ஏன் தெரியுமா.? திமுக எம்.பி பதிலடி!