Chief Minister Edappadi Palanicamy Action to take sand quarries

அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

மணல் தட்டுப்பாடு காரணமாக விழுப்புரம், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்பது மணல் குவாரிகள் கடந்த 29 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டத. ஒரு யூனிட் மணல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. 

முக்கியமான 9 மணல் குவாரிகள் மூடப்பட்டதால் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வந்த 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் மதுரையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து மணல் குவாரிகளையும், இனி அரசே ஏற்று நடத்தும் என்று தெரிவித்துள்ளார். 

மூன்று வருடங்களுக்குள்ளாக மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஆற்று மணலுக்குப் பதிலாக மக்கள் எம்.சாண்டை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அப்போது தெரிவித்தார்.