நெருங்கும் பாராளுமன்ற தேர்தல்.. தமிழகத்தில் நடைபெறும் ஏற்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு!
Chief Election Commissioner : பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு இன்று சென்னை வந்தனர்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 3 துணை தேர்தல் ஆணையர்கள் கொண்ட குழுவினர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழுவினரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர்தல் ஆணையர்கள், மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினார். நாளை பிப்ரவரி 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரையில் மீனம்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டு அறிகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷாவை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதா? அண்ணாமலை கண்டனம்
பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பின் நாளை மறுநாள் 24ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
காலை 11 மணியிலிருந்து பகல் 1 மணி வரை வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்துகின்றனர். அதன் பின்னர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு காவல்துறை தலைவர், தமிழ்நாடு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகின்றனர்.
இந்த ஆலோசனையின் போது தமிழ்நாட்டில் ஒரே நாளில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பது. அதற்கு எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்? துணை ராணுவ படை பாதுகாப்புக்கு எங்கெல்லாம் தேவை? தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? அமைதியான, நேர்மையான முறையில், தேர்தலை நடத்தி முடிப்பது எப்படி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 2 நாள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை மாலை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
தஞ்சையில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயனின் உருவ பொம்மைகள் எரிப்பு; தஞ்சையில் பரபரப்பு