வரும் 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. இந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..
சென்னையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னையடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இதில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே இது தவிர 7 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 198 மருத்துவர்கள் 74 செவிலியர்கள் உட்பட 433 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 24-ம் தேதி தமிழக சதுரங்க வீரர்களை கொண்டு மாமல்லபுரத்தில் பயிற்சிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க:பெண் குழந்தைகள் கண்ணாடிக்கு சமம்!ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.! அழுத்தி பிடித்தால் உடைந்து விடும்-தமிழிசை
அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 2, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. வீரர்கள் அரங்கத்துக்கு வந்து செல்லும் நேரங்களில் மட்டும் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் சிறியளவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முதலமைச்சர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் போட்டியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறைபாடின்றி ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மாமல்லப்புரத்துக்கு போதிய வசதியுடன், பார்வையாளர்கள் சிரமமில்லாமல் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் நல்லடக்கம்.. கதறிய அழுத தந்தை, உற்றார் உறவினர்கள்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.