ஆயிரக்கணக்கானோர் அமரக் கூடிய சென்னை சேப்பாக்கம் மைதானமே காலியாக உள்ளதால் ஐபிஎல் நிர்வாகம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. போராட்டக்காரர்களின் ஐபிஎல் போட்டி ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால் ரசிகர்கள, வீரர்கள் மைதானத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் பல ஆயிரம் பேர் திரண்டதால் காவல்துறையினர் செய்வது அறியாமல் திகைத்துபோயினர். போராட்டமானது சேப்பாக்கம் ஸ்டேடியம் சுற்றி 4 திசையில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திடீரென அண்ணா சடிலை அருகே திரண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் போராட்டத்தை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

மேலும், பெரும்பாலானோர் மைதானத்தில் டிக்கெட்டுகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.  மைதானத்தில் சில நூறு பேர் மட்டுமே அமர்ந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் வரை அமரும் மைதானத்தில் சில நூறு பேர் மட்டுமே இருந்ததால் ஐபிஎல் நிர்வாகம் பேரதிர்ச்சியில் உள்ளது.