சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு பசுமை வழித்திட்டம் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நிலங்களை கையகப்படுத்த பணி நடந்துவருகிறது.

பசுமை வழித்திட்டத்தின் மார்க்கம் என்பது சென்னை- தாம்பரம் – திருவண்ணாமலை –அரூர் –சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் மூன்று மணிநேரத்தில் சேலத்திலிருந்து சென்னை செல்லலாம் என கூறப்பட்டுள்ளது

இதனை கடுமையாக விவசாயிகள் பலரும் எதிர்த்து தற்போது சேலம் மாவட்ட ஆட்சியினர் அலுவலகம் முன் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து சேலம் செல்ல மூன்று வழிகள் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு இந்த எட்டுவழிச்சாலையை தனியார் நிறுவனத்தின் பயனுக்காக செய்கிறதென விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இருக்கும் வழித்தடங்களை மேம்படுத்தினால் போதுமானது என்றும் எட்டு வழிச்சாலையினால் விவசாய நிலங்கள் தான் பாதிக்கப்படும் என்றும் இதனால் பஞ்சம், பசி,பட்டினி ஏற்படும் விவசாயத்திஅ அழித்து விட்டு எட்டு வழிச்சாலையை வைத்து என்ன செய்ய எனக் கேள்வியை எழுப்பியுள்ளனர் விவசாயிகள்