chennai silks fire accident..
சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ 20 மணி நேர போராட்டத்துக்கும் ஊரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டத்தில் தீயால் ஏற்பட்ட நெருப்புக் கனலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை தீ பிடித்தது. தொடர்ந்து 20 மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து வருவதால் சென்னை சில்க்ஸ் கட்டடம் கொஞ்சம் கொஞ்சமா இடிந்து வருகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்தது ராட்சத எந்திரம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ராட்சத நுரை கலவை எந்திரம் மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேல் தளத்தில் தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது 4 ஆவது மாடியில் உள்ள 15 அடி உயர முகப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறையினர் பின்புறம் இருந்தது தீணை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

அதே நேரத்தில் வெப்பம் தாங்காமல் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியாக இடிந்து வருவதால் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை சில்க்ஸ் கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டடத்தின் நான்கு பகுதிகளிலும் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத்துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புகை மூட்டமும் கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்த மீனாட்சி விஜயகுமார், கட்டடத்தில் தீயால் ஏற்பட்ட நெருப்புக் கனலை கட்டுப்படுத்த ஆயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து இரவு முழுவதும் தீயணைக்கும் பணிகள் தொடரும் என்றும் நெருப்புத் தணலை முற்றிலும் குளிர்வித்த பின்னர் தீ கட்டுக்குள் வரும் என்றும் மீனாட்சி தெரிவித்தார்.
