ஆட்டம் போட ரெடியா.? கலக்க வருகிறது சென்னை சங்கமம்.! எப்போது .? எத்தனை இடங்களில்.? வெளியான லிஸ்ட்

 சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா, சென்னையில் 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும். 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இவ்விழாவில் நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் இசை, நடனம், பிற மாநிலக் கலைகள் மற்றும் உணவுத் திருவிழாவும் இடம்பெறும்.

Chennai Sangam will be held at 18 places in Chennai from tomorrow kak

பொங்கல் கொண்டாட்டம்- நம்ம ஊர் திருவிழா

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் "சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா" கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் 13.1.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Chennai Sangam will be held at 18 places in Chennai from tomorrow kak

கலக்க வருகிறது சென்னை சங்கமம்

மேலும், சென்னையில் 18 இடங்களில் 14.1.2025 முதல் 17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Chennai Sangam will be held at 18 places in Chennai from tomorrow kak

1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள்

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம் -நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு, ஆட்டம் கொண்டாடுகின்றனர்.

பாட்டத்துடன் பொங்கல் பண்டிகையைக் தமிழர் திருநாளாம் பொங்கலைப் பொதுமக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிடும் வகையில், கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios