திமுக தலைவர் கருணாநிதியை உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேரில் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். சென்னை வந்ததும் ரஜினி மருத்துவமனை சென்று கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒருவாரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உடல் நிலை மோசமானது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்பு அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள அரசியல் தலைவர்களும், திமுக தொண்டர்களும் அவரது நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தொலைபேசியின் மூலமாக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேரில் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாளை சென்னை வந்ததும் ரஜினிகாந்த் மருத்துவமனை சென்று கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.