chennai police officialy announce fine amount paid system
காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் இடையே அபராதம் செலுத்தும் விவகாரத்தில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் இனி ரொக்கமாக அபராதம் செலுத்த முடியாத வகையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், மோட்டார் வாகனச் சட்ட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் போலீசார் ஆன் ஸ்பாட் ஃபைன் வசூலித்து வருகின்றனர். அதாவது வாகன ஓட்டி விதிகளை மீறியது தெரிந்தால் அந்த இடத்திலேயே அவரிடம் இருந்து போக்குவரத்து காவலர் அபராதம் வசூலிப்பார்.
இந்த முறையில் அபராதம் வசூலிக்கும் போது போலீசார் அபராத தொகையை விட குறைவான தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு விதிகளை மீறுபவர்களை அனுப்பி வைப்பதாக புகார் எழுந்தது வருகிறது. இப்படிப்பட்ட விதிமுறைகளை, தகர்க்கும் விதத்தில், இனி சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் எந்தவொரு வாகன ஓட்டிக்கும் அபராத தொகைக்கான ஈ சலான் மட்டுமே கொடுக்கப்படும். ஈ சலானில் குறிப்பிட்டுள்ள அபராதத் தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே போலீசாரிடம் வாகன ஓட்டிகள் இனி செலுத்த முடியும். அதாவது, டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் , பே.டி.எம்., எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் பேமென்ட் வசதி, அஞ்சலகம், ஈ-சேவை மையம், நீதிமன்றம் என 6 வகைகளில் விதிகளை மீறுபவர்கள் போக்குவரத்து காவலரிடம் அபராதத்தை செலுத்தலாம். இந்த புதிய முறையை சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
