பாலியல் வழக்கு... சாமியார் சதுர்வேதிக்கு வலை... தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். தன்னை தானே சாமியார் என்று பிரகடனபடுத்தி கொண்டவர் சதுர்வேதி, அவருக்கு வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் உள்ளது.
சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். தன்னை தானே சாமியார் என்று பிரகடனபடுத்தி கொண்டவர் சதுர்வேதி, அவருக்கு வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வந்தார். ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி மற்றும் மகளை கடத்தியதாக சாமியார் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த சமயத்தில் 2 பேரையும், சாமியார் சதுர்வேதி பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுரேஷிடம் ரூ. 15 லட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது. அதுமட்டுமின்றி டி.டி.கே சாலையில் உள்ள சுரேஷ் வீட்டின் கீழ் தளத்தையும் ஆக்கிரமித்ததாக சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மத்திய குற்றவியல் பிரிவு காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க தொடங்கினர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த விசாரணையில் சாமியார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார். சில தினங்களில் ஜாமினில் வெளிவந்த சாமியார் தலைமறைவாகி விட்டார் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
சாமியார் சதுர்வேதி, அடிக்கடி வட இந்திய மாநிலங்களுக்கும் நேபாள நாட்டுக்கும் ஆன்மிக சுற்றுலா சென்று வருவது வந்தார். இதனால், சாமியார் சதுர்வேதி நேபாளம் தப்பியிருக்க வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வரும் நேரத்தில் சாமியார் மாயமானதால் நாடு முழுவதும் உஷார் நிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சதுர்வேதியின் புகைப்படங்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 2004ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெண், தன்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சாமியார் சதுர்வேதி மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கு சாமியார் சதுர்வேதி மீது சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடக்கிறது.