Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rains : மீண்டும் வரும் “கனமழை…” எச்சரித்த வானிலை ஆய்வு மையம்… மக்களே உஷார்….

மீண்டும் தமிழகம் முழுக்க கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu again
Author
Tamilnadu, First Published Nov 28, 2021, 1:21 PM IST

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் பொதுவாக தமிழகம் முழுவதுமே, இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  இன்று  கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி,  காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர்,   திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Chennai Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu again

நாளை (29.11.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். செவ்வாய்கிழமை (30.11.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

Chennai Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu again

தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 1-ம் தேதி  தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்’ என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன  மழை பெய்யக்கூடும். 

Chennai Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu again

அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்றும் கூறி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம்,செங்கல்பட்டு,திருவாரூர்,காரைக்கால்,மயிலாடுதுறை,கடலூர்,புதுக்கோட்டை,(தஞ்சாவூர்,(திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. வங்க கடல் பகுதிகளில் இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Chennai Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu again

நாளை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசம். அரபிக்கடல் பகுதியில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் 30  ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios