தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்றும், 29 ஆம் தேதிக்குப் பிறகுதான் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து குளிர்ச்சியாக தட்பவெப்ப நிலை உருவாகியிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக மழையின் அளவும்  குறைந்து கடுமையான வெயில் அடித்து  வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், தென் மேற்கு பருவமழையின் தாக்கம் குறைந்தள்ளதால் வெயில் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இதனால் அடுத்த 4 நாட்களில் தமிழகம் முழுவதும் கடும் வெயில் இருக்கும் என்றும் வரும் 29 ஆம் தேதிக்குப் பின்னர்தான் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

நேற்று அதிகபட்சமாக மதுரையில்  106 டிகிரியும், திருத்தணியில் 104 டிகிரியும், வேலுரில் 103 டிகிரியும் வெப்பம் பதிவானது. 
இதனால் பொது மக்கள் அவதிப்பட்டதுடன், கோடை காலத்தில் இருப்பதைப் போன்று இருந்தது என்று தெரிவித்தனர்.