நெடுநாளாக கள்ளக்காதலனாக இருந்த தாம் மெதுவாக அவரிடமிருந்து விலக நினைத்த போது வீட்டுக்கு அழைத்த அவர் உறவு கொள்ள வற்புறுத்தினார். மறுத்தால் என் மனைவியிடம் கள்ளதொடர்பை சொல்லி விடுவதாக மிரட்டியதால் கொலை செய்தேன் என 55 வயது பெண் வக்கீலை கொலை செய்த கள்ளக்காதலன் தெரிவித்துள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் , சென்னை குமரன்நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஐகோர்ட் பெண் வக்கீல் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை போலீசார் மீட்டு கொலையாளியைத் தேடி வந்தனர்.

சென்னை மேற்குமாம்பலம் குமரன் நகர், தேவன் காலனி, முத்தாரம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் லட்சுமி சுதா (வயது 58). கடந்த 30 ஆண்டுகளாக சுதா தனது கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்து வந்தார். 

இவரது மகன் கார்த்திக் திருமணமாகி பெங்களூருவில் மனைவியுடன் வசித்து வருகிறார். சென்னை ஐகோர்ட் வக்கீலான சுதா கடந்த 5 ஆண்டுகளாக வேலைக்கு பணிக்கு எதுவும் செல்ல வில்லை. வீட்டிலேயேதான் தனியாக வசித்து வந்தார்.

 இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமி சுதாவின் சகோதரி வித்யா அருள்மணி தனது அக்காளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்ற போது, லட்சுமி சுதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முதுகு, கழுத்தின் பின்புறம், இடுப்பு, முதுகு என சுமார் 10 இடங்களில் கத்தியால் குத்தியதற்கான காயங்கள் இருந்தன. 

அக்காளின் இந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வித்யா இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அடையாறு துணைக்கமிஷனர் சுந்தரவடிவேலு தலைமையில் குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

லட்சுமி சுதாவின் வீட்டுக்குள் இருந்த பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. நகைகள் எதுவும் திருட்டு போனதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். வீடு திறந்து கிடந்ததால் லட்சுமி சுதாவுக்கு தெரிந்த நபர்கள்தான் வீட்டுக்குள் வந்திருக்க வேண்டும் என போலீசார் கருதினர்.

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலை கள்ளக்காதலால் நடந்தது தெரியவந்தது. கணவனை பிரிந்து தனிமையில் வாடிய லட்சுமி சுதா தனது தோழி ஒருவர் மூலம் பழக்கமான நுலம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் எனபவரது தொடர்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து இருவருக்குள்ளும் தொடர்பு வலுத்து நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தொடர்பு பற்றி அக்கம் பக்கத்தவர் கூறியதை வைத்து கார்த்திகேயனை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒத்துகொண்டார்.

2008 ஆம் ஆண்டு முதல் தனக்கு லட்சுமி சுதா பழக்கம் , முதலில் மசாஜ் சென் டர் நடத்தி வந்ததாகவும் அப்போது தனக்கு லட்சுமி சுதா பழக்கமானார். ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்த உறவு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. லட்சுமி சுதாவின் கணவரை டைவர்ஸ் செய்து தனியாக இருந்தது எனக்கு வசதியாக போய்விட்டது. அவரது மகனும் பெங்களூருவில் இருந்ததால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அடிக்கடி லட்சுமி சுதா வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் தான் கோடக் மகேந்திரா கம்பெனியில் சேர்ந்து அதன் பின்னர் வேறு ஒரு நிறுவனத்தில் சீனியர் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியில் இருக்கிறேன். கடந்த ஆண்டு எனக்கு திருமணமானது. இதனால் அடிக்கடி லட்சுமி சுதாவுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை , அதனால் லட்சுமி சுதா கோபப்படுவார். 

எனக்கும் அவர் கசந்து போனார். ஒழுங்காக இல்லற வாழ்க்கையில் ஈடுபட நினைத்து ஒதுங்கி போனேன் ஆனால் அவர் விடாமல் என்னை அழைத்து தொந்தரவு செய்தார். இந்நிலையில் 31 ஆம் தேதி அவர் வீட்டுக்கு போனேன். மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்தினார். பின்னர் உறவுக்கு அழைத்தார். நான் இனிமேல் இப்படி வேண்டாம் என மறுத்தேன் . இதனால் ஆத்திரமடைந்த அவர் நமது கள்ளதொடர்பை வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் ஆத்திரத்தில் அவரை சரமாரியாக கத்தியில் குத்தி கொன்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன் என்று கூறியுள்ளார். போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர்.