தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே கன மழை வெளுத்து வாங்கி வருகிறது இந்நிலையில் சென்னை கிளம்பாக்கத்தில் மழை நீர் கடலென தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தலைநகர் சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து தங்கி இருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை நீண்ட நாட்கள் விடுமுறை விடப்படும்போதும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் காட்சிகள் இயல்பான ஒன்றாக மாறி உள்ளது என்றுதான் கூற வேண்டும். 

இந்நிலையில் இந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாகவும், எளிமையாகவும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர வசதியாக சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 

சுதந்திர தின தேநீர் விருந்து.. புறக்கணித்த தமிழக முதல்வர்.. விருந்தையே ரத்து செய்த ஆளுநர் - என்னதான் ஆச்சு?

மேலும் இந்த பேருந்து நிலையம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மக்களுடைய பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்வி ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம், அதனை தொடர்ந்து பல காரணங்களால் திறக்கப்படுவது தாமதமாகி வந்தது.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் இந்த நேரத்தில் கிளம்பாக்கத்தில் பெய்த பலத்த மழையால் அங்கு கடலென மழைநீர் தேங்கி நிற்கும் காட்சிகளை நம்மால் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது.

Scroll to load tweet…

மழைநீர் அதிக அளவு அங்கு தேங்கியதன் காரணமாக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த வெள்ளத்தில் சிக்குண்டிருப்பதையும் நம்மால் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

கிளம்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் பெரும்பாலான அளவு முடிவடைந்த நிலையிலும், அங்கு தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருவதாலேயே இந்த பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Ariyalur : திடீர் மயக்கம்.. 100 நாள் வேலை செய்த பெண் உயிரிழப்பு - அரியலூர் அருகே சோகம்