CHENNAI high court allowed aiyakannu to do protest in merina
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்னுக்கு அனுமதி கிடைத்துள்ளது
மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது
மெரினாவில் போராட்டம் நடத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதனை எதிர்த்து அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி தரலாம் என உத்தரவு பிறப்பித்துஉள்ளது

அதில்,அமைதி முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாம் என்றும், 90 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கோரி இருந்த அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவிற்கு,ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
மேலும், இது கோடைக்காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் இடம் மெரீனா, அதுவும் 90 நாட்கள் உண்ணாவிரதம் என்பது போக்குவாரத்திற்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கும் இடையூராக இருக்கும் என கூறி ஒரு நாள் மட்டுமே அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயி அய்யாக்கண்ணுக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது
