சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் முன்னோட்டமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

 இந்நிலையில் சென்னை மாநகரம் முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பிராட்வே, மெரீனா, அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

படிப்படியாக வடகிழக்கு பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தருந்த நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. 3 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.