சென்னையில் உள்ள 55 ஆயிரம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் 8 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. 

சென்னை வெள்ளப்பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து எடுத்த வழக்கு. மற்றும் சென்னைபெரு வெள்ளத்தில்போது அரசு கட்டுபடுத்த தவறியதாக கூறியும் மனுதாரர்கள் ராஜீவ் ராய், முரளிராஜா உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்த பரிந்துரைகளை 2 வாரத்தில் மாநில அரசுக்கு மனுதாரர் கொடுக்க வேண்டும். அதை 4 வாரத்தில் பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் . அடுத்த 4 வாரத்தில் மத்திய அரசு பரிசீலித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்போது மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இது மலைப்பகுதிகளுக்கு பொருந்தும் வகையில் இருப்பதாகவும், தமிழகத்திற்கு பொருந்தாது என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை மையங்கள் தமிழகத்தில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சென்னையை பொறுத்த வரை நீர்நிலைகளின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள 55 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் கண்டயறிப்பட்டுள்ளன என்றும், அதில் 8000 ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்து மனுதாரர் வைத்துள்ள பரிந்துரைகளை, அவர் மாநில பேரிடர் மேலாண்மை குழுவிடம் 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும், அதை 2 வாரங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் பின்னர் 4 வாரங்களில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

பின் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 30க்கு தள்ளிவைத்தனர்.