செம போதையில் கார் ஓட்டிய காமராஜ் மகன்... 3 பேருக்கு பயங்கர காயம்!
பிரபல டாக்டர் காமராஜின் மகன், அசுர வேகத்தில் காரை ஓட்டி சென்று, பைக்குகள் மீது மோதி, பிளாட் பாரத்தில் இருந்த 3 பேர் மீது மோதினார். இதில், அவர்கள் படுகாயமடைந்தனர்.
பிரபல டாக்டர் காமராஜின் மகன், அசுர வேகத்தில் காரை ஓட்டி சென்று, பைக்குகள் மீது மோதி, பிளாட் பாரத்தில் இருந்த 3 பேர் மீது மோதினார். இதில், அவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக அவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். டாக்டர் காமராஜ். வடபழனியில் குழந்தை கருத்தரிப்பு மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவியும் டாக்டர் ஜெயராணி. இவர்களது மகன் ஆகாஷ்.
இந்நிலையில் நேற்று ஆகாஷ், தனது நண்பகர்களை சந்திக்க வெளியே சென்றார். இரவு வீட்டுக்கு புறப்பட்டார். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் அருகே சென்றபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மோதியது.
பின்னர், பிளாட் பாரத்தில் நின்றிருந்த 3 பேர் மீது மோதிவிட்டு, அங்கிருந்த கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பரபரப்பு நிலவியது
தகவலறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, காரை பறிமுதல் செய்து, ஆகாஷையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், விபத்தில் சிக்கி காயமடைந்த 3 பேரை மீட்டு, சென்னை அரசு பொதுமருத்துமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.